பாடலைத்
தொடர்ந்தே
சென்றேன்...18
இன்று
என்னுடைய
பகிர்வு
ஐம்பத்தி
ஒன்பதில்
வெளிவந்த
தங்கப்பதுமைப்
படத்தில்ருந்து
சந்தோஷமான
"என்
வாழ்வில்
புதுப்
பாதைக் கண்டேன்"இந்தப்
பாடலின்
சிறப்பு......பாடல்
முழுவதும்
சுசீலாம்மாவின்
இளமைத்
துள்ளல்,பட்டுக்கோட்டையாரின்
இயல்பான
வரிகள்,மெல்லிசைமன்னரின்
அபாரமான இசை,பப்பிம்மாவின்
அழகும்,இளமையும்
துள்ளும்
நடனம்.......கருப்பு
வெள்ளைக்
காலத்தின்
வண்ணக்கோலம்
இந்தப்பாடல்.
மூன்று
நிமிடப்
பாடல்....ஆனால்
அந்த வேகம்(ஸ்பீட்)ஆஹா....இப்படி
ஒரு துரித
காலப்பரமாணபாடல்,அதிலும்
மூச்சு
விடக்கூட
நேரமில்லாத
சங்கதிகள்.......இதை
சுசீலாம்மாவைத்தவிர
வேறு யாராலும்
பாடமுடியாது
என்று
இங்கிதம்
தெரிந்த மெல்லிசைமன்னர்கள்...பிறந்தது
பாடல்....
இந்தப்
பாடல்
சுசீலாம்மாவின்
இருபத்தி நாலு
வயதில்
பாடப்பட்ட
ஆரம்ப காலப்
பாடல்.....அவருடைய
எதிர்காலத்தை
தீர்கதரிசனமாக
உரைத்த பாடல்..."என்
வாழ்வில்
புதுப்பாதை
கண்டேன்....ஏதும்
தோணாமல்
தடுமாறி
நின்றேன்
என்று தோழியிடம்
கதாநாயகி தன
எதிர்கால
மணவாழ்வைபற்றி
பாடுகிறார்......
என்னென்ன
மாதிரி
வாழப்போகிறேன்?சொல்கிறாள்..."இருமனம்
ஒன்றும்
திருமணத்தாலே
இணையே இல்லாத
இல்வாழ்விலே..தேவைதனை
உணர்ந்தே
சேவை செய்து
மகிழ்ந்தே
சிறந்த
இன்பம் காணுவேன்"இந்த
வரிகளை அம்மா
எப்படி
அழகாகப் பாடி
இருப்பார்
தெரியுமா?
நாணம்
கொப்பளிக்க...அங்கு
இருக்கும்
மானிடை இந்தப்
பெண்மான்
"உறவாடும் காதல்
சுகம்
வரும்போது
உன்னை
மறந்தாலே அதிசயம்
எது?......கிடையாது
என்று
மென்மையாக,அழுத்தமாக
நாணத்தோடு
பாடி
இருப்பார்கள்.
இதற்கு
எல்லாவற்றிற்கும்
சிகரம்
வைத்தாற்போல்
அந்த
கனவோ...அன்றி
நனவோ...எனதன்பே
நீ சொல்லாயோ.....
.சொல்லாயோவில் ஒரு மூச்சு விடாத சங்கதி.....அப்பாப்பா....புல்லரிக்கும்...அவரைத்தவிர வேறு யாராலையும் அப்படி அனாயாசமாக அந்த சங்கதி பாட முடியாது.....இனிமை,வேகம்,கச்சிதம்,துல்லியம்....எப்படி வேண்டுமானாலும் அதை சொல்லலாம்.மூன்று நிமிடத்தில் பாடிய சுசீலாம்மாவும்,ஆடிய பப்பிம்மாவும்......கிட்டத்தட்ட ஐமபத்தி நான்கு வருஷங்களாகியும் இன்னும் நம்மை கிறங்க வைக்கிறார்கள் என்றால்......காலத்தை வென்ற பாடல் இது என்று உறுதியாக சொல்லலாம்.இதோ உங்களுடன்....