Visali Sriram

 

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...45

இன்று ஒரு தாயின் கனவு...இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.இந்தப் பாடல் இடம்பெற்ற படம் "சிவகாமியின் செல்வன்"

ஹிந்தியில் "ஆராதனா"வாக சக்கை போடு போட்ட படம்....தமிழில் சுவை சிறிதும் குறையாமல் எடுக்கப்பட்டிருந்தது என்றால் அதற்கு

முக்கிய காரணம் நடிகர் திலகம்,வாணிஸ்ரீ,பாடல் வரிகள்வாலி அவர்கள்.. ,அற்புதமான இசை மெல்லிசைமன்னர்.இந்தப் பாடல் ஹிந்தி பாடலை விட ஒரு படி அதிகமாக

என் இதயத்தைத் தொட்டதற்கான காரணம் சுசீலாம்மா....எப்படி பாடியிருக்கிறார்கள்...ஆஹா....இதைக் கேட்கும் போதெல்லாம் அம்மா அவர்கள் மகனை இப்படிப் பாடித்தான் தாலாட்டி இருப்பார்களோ என்று நினைப்பேன்.தான் பெற்ற குழந்தைக்குத் தானே ஆயாவாக வந்து வளர்க்கும் துர்பாக்கியம் இந்தத் தாய்க்கு....அவளின் கண்ணின்மணி...நம்பிக்கை நட்சத்திரம் அவன்..."என்...ராஜாவின் ரோஜா முகம் என்று பாடல் ஆரம்பிக்கும்...அந்த "என்"இதில் ஒரு அழுத்தம் கொடுத்து....இவன்...என் மகன் என்ற அந்தத் தாயின் கர்வத்தை...பொசசிவ்னெஸ் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்....ரோஜா முகம்....இந்த ரோஜாவில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான சங்கதி...திங்கள் போல் சிரிக்கும்....இந்த"போல்"இதில் தான் எத்தனை வெரைட்டி..செவ்வாயில் பால் மணக்கும்...இங்கேதான் இனிமை கொட்டிக் கிடக்கும்....செவ்வாயில்.அந்த இல்.இதில் ஒரு இனிமை...அடுத்த செவ்வாயில்....ஒரு ரவை சங்கதி.....இந்த உலகத்தையே சுசீலாம்மாவுக்கு எழுதிக் கொடுத்துவிடலாம் போல ஒரு சங்கதி...."பட்டு இதழ் பெட்டகத்தை மெல்லத்திறந்து....கொட்டித்தரும் சர்க்கரையாம் முத்த விருந்து....தத்தித் தத்தி தளர் நடை தடுமாற...தொட்டுத் தொட்டு கட்டிக் கொண்டேன் மனமாற.......தமிழ் மொழியின்,தகர,டகர,இங்கே கொஞ்சி விளையாட,தாய்மொழி தெலுங்கானாலும் தமிழுக்கு முழு அழகு செய்திருக்கும் அம்மாவைப் பாராட்ட வார்த்தைகளில்லை.மகனை,பள்ளிக்கு அனுப்பி,அவன் மேதையென்று பேர் எடுப்பதனால்....இவளை...அவனின் தாய் என்று உலகம் கொண்டாட வேண்டும் என்று கொஞ்சி மகிழும் இடத்தில் சுசீலாம்மாவும்,வாணிஸ்ரீயும் போட்டி போட்டுக்கொண்டு நம் கண்களை நனைப்பார்கள்.மகன் படிப்பு முடித்து வரும் நாளில் ஓடி வந்து அணைக்க நான் வருவேன் என்று சொல்லி...."மண்ணில் உள்ள தங்கத்துக்கு மதிப்பிருக்கும்,துன்பம் கூட நல்லவர்க்கு வாழ்வளிக்கும்...உண்மை அன்பு உன்னிடத்தில் உள்ள வரைக்கும்...உன்னைத் தான் தேடி வரும் வெற்றிப் பதக்கம்"என்று முடிக்கிறார் இந்தப் பாடலை.உணர்ச்சிப் பிழம்பான தாய்மையை இந்த சுசீலாம்மாவைத் தவிர வேறு யார் பாடி இருந்தாலும் இவ்வளவு நெஞ்சை அள்ளி இருக்காது.இதில் ஒரு அஹார சங்கதி சரணம் முடிவில்......அந்த அகார சங்கதிக்கு ஓராயிரம் ஆஹா.....இந்தப் பாடலை.....எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்களோ தெரியாது.....கேட்காதவர்கள் கேளுங்கோ.....கேட்டவர்கள்....கேட்டுக்கொண்டே இருங்கள்......இனிமை இனிமை....தாய்மை..