Visali Sriram

 

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்....8

ஒரு அரிய இனிய பாடல்...1969 இல் வெளிவந்த திருடன் படத்தில் இருந்து......பாடலின் வேகத்தைக் கேட்டு இன்று வரை பிரமிப்பு.....வரிகள் மேலோட்டமாகத் துள்ளலாக இருந்தாலும் ஆழ்த்தில் இதயத்தில் தைக்கும் நெருஞ்சி முள்...

அவள் ஒரு நல்ல குடும்பத்தலைவி...சந்தர்ப்பம் அவளை இப்படி ஆடும் நிலைக்குத் தள்ளுகிறது.இது காட்சி...

பாடலைப் பாடி இருப்பவர் சுசீலாம்மா...எத்தனை பேருக்கு இந்தப் பாடல் நினைவில் இருக்கும் என்று தெரியாது....நினைவில் நிலைக்கும் பாடல்

அசுர வேகப் பாடல்...தாளத்தின் வேகத்தோடு இணந்து இனிமை சொட்ட சொட்ட.."என் ஆசை என்னோடு..சலங்கை தரும் ஓசை உன்னோடு உலகமே ஆடும் பெண்ணோடு...மயக்கம்தான்..ஓஹோ ஓஹோ...ஆஹா ஆஹா....இது பல்லவி....

என்ன வேகம்....அதிலும் ஒரு விவேகம்...மயக்கம்தான்...இதைக் கேட்கும் போதே மயக்கம்தான் நமக்கு ..பிரமிப்பில்....

மயக்கம் பல வகைப் படும் இந்த மயக்கம் போதை மயக்கம் இல்லை....பிரமிப்பு மயக்கம்...அதில் என்ன ஒரு இனிமை...ஒவ்வொரு முறை அந்த மயக்கம்தான் பாடும் போதும் சிலிர்த்துத் தான் போவோம்...

முதல் சரணம்..."கூட்டத்தில் விளையாடப் புதிதானவள்..கோலத்தில் அலங்காரம் பழகாதவள்...பாட்டுக்கு நடை போட்டு அறியாதவள்..பாவத்தைப் பிறர் காண சகியாதவள்...ஆட்டத்தில் ஆசை உண்டு...ஆசைக்குத் தேவை உண்டு....என்ன ஆசை????

"கேட்டால்...உலகமே ஆடும் பெண்ணோடு"...மயக்கம்தான்...ஆட்டத்தில் ஆசை உண்டு...ஆசைக்குத் தேவை உண்டு......ஆசைக்கு...இங்கு அழுத்தி..இழுத்துப் பாடி இருக்கும் நயம்....ஆஹா...

"மதுக் குடத்தில் நனைத்தெடுத்தது எந்தன் உடலல்ல.......

.. .பொன்னென அணைக்க வந்தவள் நானல்ல நானல்ல..."நீங்கள் எல்லோரும் நினைக்கும் படியாக உங்கள் உணர்ச்சியோடு விளையாட வந்த பெண் நானல்ல...

"மணமுள்ள மலர் காணக் கொடியானவள்...

வாழ்கின்ற துணைத் தேடித் தனியானவள்..."

நான் யார்?எங்கேயோ வாழ்ந்து கொண்டிருக்கும் என் துணையைத் தேடித் தனியாக இங்கு வந்து உங்கள் முன் ஆடிக் கொண்டிருப்பவள்...

"வழி கண்டு மனம் தேட சிலையானவள்..

மானத்தில் நிழலோடு கலையானவள்"......மானத்தோடு கலையானவள்...இரண்டு வார்த்தையில் அவளின் மாசற்ற பெண்மை.....அதைச் சொல்லும் வேகம்...அதில் ஒரு சுகமான இனிமையான வலி(அந்தக் குரலுக்கு இனிமை இல்லாமல் பாட முடியாதே)!

மயக்கம்தான்...ஆஹா...ஆமாம்...மயக்கமேதான்....

இந்தப் பாடலுக்குக் காணொளி தேவையில்லை...பாட்டைக் கேட்டாலே காட்சி தெரியும் என்பதாலோ என்னவோ காணொளி கிடைக்கவில்லை....

பாடல் உங்களோடு.....தொடர்ந்தே செல்வோம்....http://www.inbaminge.com/t/t/Thirudan/Enn%20Aasai%20Ennodu.vid.html