Visali Sriram

 

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்..51

சம் சம்....

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்...

1971 சவாலே சமாளி...இந்தப் பாடலத் தொடர்ந்து செல்லும்போது நாம் எல்லோருமே உணர்வது இந்தக் குரலில் உள்ள இன்னஸென்ஸ்......அம்மாவின் பாடல்களில் இந்த இன்னஸென்ஸ் பரவிப் படர்ந்து செல்வதை உணரலாம்....அவர் பாடல் எல்லோருடைய இதயம் நிறைப்பதற்கு அதுவும் ஒரு முக்கியமான காரணம்.சுசீலாம்மா..."அம்மா'வுக்காகப் பாடியிருக்கும் இந்தப் பாடல் சூப்பர் ஹிட் பாடல்...

கதையின் நாயகி செல்வச் செழிப்பில் பிறந்து வளர்ந்த பெண்..பட்டணத்து கல்லூரி மாணவி...விடுமுறைக்கு கிராமத்தில் உள்ள தன் வீட்டிற்கு வருகிறாள்...கூண்டை விட்டு பறக்கும் சிட்டாக அவள் மனம் சிறகடித்துப் பறக்க பிறக்கிறது பாடல்....

சம் சம் சம் சம் சம் சம்..லல்ல லா...குதூகலமான ஒரு ஆரம்பம்..குழலோசையும் இந்தக் குயிலோசையும் இணைந்தால் எப்படி இருக்கும்....இப்படித்தான் இருக்கும்...ஆரம்பக் குழல்...அம்மாவின் குரல்...

"சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு தென்றலே உனக்கிது சொந்த வீடு..உலகம் முழுதும் பறந்து பறந்து ஊர்வலம் வந்து விளையாடு"இது பல்லவி....கட்டறுந்த காளை என்று சொல்லலாம் என்றால் குரலின் இனிமை தடுக்கிறது...கூண்டை விட்டு தப்பி வந்த குயில் என்று சொல்லலாம்...

ஒரு குழந்தையைப் போல் துள்ளிக் குதிக்கும் ஜயலலிதா...அவர் துள்ளலுக்கு குரலாலே அழகு சேர்க்கும் அம்மா...

பாடல் வரிகள் ஜெயலலிதாவுக்கென்றே எழுதப் பட்டிருக்குமோ???

அப்படி ஒரு கேரக்டர் ரிவீலிங் பாடல்...

"மரத்தில் படரும் கொடியே உன்னை வளர்த்தவரா இங்கு படரவிட்டார்...ட ட ட ட ட.....அந்த டடாவுக்கு என்ன சொல்வது அடா அடா அடாதான்..

மண்ணில் நடக்கும் நதியே உன்னைப் படைத்தவரா இந்தப் பாதை சொன்னார்..

உங்கள் வழியே உங்கள் உலகு...

இந்த வழிதான் எந்தன் கனவு"....சுதந்திரப் பறவை...

பார்க்கும் எல்லாப் பொருளுக்கும் ஒரு வரி பாடல் முழுவதும்...

"பழத்தைக் கடிக்கும் அணிலே இன்று பசிக்கின்றதா..பழம் ருசிக்கின்றதா..

பாட்டுப் படிக்கும் குயிலே நீ படித்ததுண்டா சொல்லிக் குடுத்ததுண்டா...

"நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும்...கேட்டதெல்லாம் கிடைக்க வேண்டும்"....

வளரும் தென்னை மரமே நீ வளர்ந்தது போல் நான் வளர்ந்து நிற்பேன்....(நின்னாரில்ல!!)வணங்கி வளரும் நாணல் நீ வளைவது போல் தலை குனிவதில்லை....

பார்க்கும் கண்கள் பணிய வேண்டும்...பாவை உலகு மதிக்க வேண்டும்.....மதித்தது....மதிக்கும்...

ரா ரா...லா லா...குஷியில் தொடரும் துள்ளல்...

பாடல் முழுவதும் கேட்கும் போது காணொளி இல்லாமலே அந்த யுவதியைக் கண்ணில் நிறுத்தி விடும் அம்மா...அம்மம்மா.

பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஒரு இனம் புரியாத குழந்தையின் குதூகலம்....

என் சோகத்தை எத்தனை முறை மாற்றி இருக்கும் பாடல்...இன்று மீண்டும் உங்களுடன்.....