Visali Sriram

 

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...59.

1964,ி.எஸ்வீரப்பா தயாரிப்பில் வெளி வந்த திரைப்படம் "ஆண்டவன் கட்டளை"நடிகர் திலகம் தேவிகா....பாடல்கள் ஒவ்வொன்றும் காலத்தால் அழிக்க முடியத பாடல்கள்.கவியரசரின் வரிகள்...இசை மெல்லிசை மன்னரகள்..."அமைதியான நதியினிலே ஓடம்"..என்ன பாடல் அது...

இன்றைய பகிர்வு இன்னொரு சூப்பர் பாடல்.சுசீலாம்மா பாடிய "அழகே வா..அருகே வா"கேட்பவர்கள் கண்டிப்பாக என்னைப் போல் தொடர்ந்து செல்வது உறுதி...

கதையின் நாயகன் நடிகர் திலகம் க்ருஷ்ணன் பாத்திரத்தில் கனக் கச்சிதம்...விவேகானந்தரின் வழியைத் தொடர்ந்து ப்ரும்மச்சாரியாகவே வாழ முடிவு செய்திருப்பவர்...அவர் உறுதி நிலைத்ததா???பங்கம் வருகிறது மாணவி ராதா(தேவிகா) வடிவில்....

தேவிகா அவரை எப்படியாவது காதல் வலையில் சிக்க வைக்க அரும்பாடு படுகிறார்.அந்த முயற்சி இந்தப் பாடல்....காதல்,விரகம் பொங்க அவரை அழைக்கும் பாடல்...

சுசீலாம்மாவைத் தவிர வேறு யார் இந்தப் பாடல் பாடி இருந்தாலும் பாடலின் புனிதத் தன்மைக் கண்டிப்பாகக் கெட்டிருக்கும்...

இன்னொன்று பாடலின் 'பிட்சிங்'.....சுருதி....

சரணம் முழுவதுமே மேல் ப்ரயோகங்கள் தான்...வார்த்தையும் தெளிவாய்...சுருதியும் சுத்தமாய்...இனிமையும் குறையாமல் அசத்தி இருப்பார்கள்...

பாடல் திருவனந்தபுரம் கோவளம் கடற்கரையில் ,கடல் பாறையின் மேல் எல்லாம் படமாக்கப் பட்டது,தேவிகா கடல் அலையால் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டது,காப்பாற்றப் பட்டது சுவாரசியமான உண்மை.

அலை கூட ஒரு நொடி சப்திக்காத நிசப்தம்...காற்றில் தவழ்ந்து வரும்"அழகே வா...அருகே வா...அலையே வா..தலைவா வா"..கரையில் நடந்து கொண்டிருக்கும் நடிகர் திலகத்தின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக ஈர்க்கப்பட்டுத் திரும்பும்....கண்களில் ஒரு பீதி...தொடரும் பின்னணி இசையில் ஒரு அமானுஷ்யம்....தூரத்தில் அலையின் நடுவில் பாறையில் அழகே உருவாய் தேவிகா...அழைப்பது அவரே என்று தெரிந்த முகத்தில் இன்னும் கொஞ்சம் குழப்பம்..

உறுதி தளருமோ???

தொடரும் வயலின் இன்னும் கொஞ்சம் மர்மத்தைக் கூறுவது போல...

தொடர்கிறாள் அழகே..

"ஆலய கலசம் ஆதவனாலே...மின்னுதல் போலே மின்னுது இங்கே"கவியரசரின் வரிகளின் வலிமையில் கூட ஒரு கண்ணியம்....பெண்ணழகைப் பற்றி இலைமறை காயாக உரைத்ததைப் பாடி இருக்கும் நேர்த்தி அது பாடுபவரின் கீர்த்தி...அப்படி ஒரு இனிமை..

மேற்கொண்டு நடிகர் திலகத்தை நடக்க விடாமல் மடக்கணும்...எப்படி....இப்படித்தான்"ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டு விட்டேன்..நான் கேட்டதை எங்கே போட்டு விட்டாய்..என்ன தேடுகிறாய்..எங்கே ஓடுகிறாய்..உந்தன் தேவைகளை ஏன் மூடுகிறாய்?'

ஒரு துளி பிசிறில்லாமல் இந்த ஸ்தாயியில் சுசீலாம்மாவைத் தவிர யாரால் பாட முடியும்?அப்படி ஒரு இளமையான இனிமை குரலில்...

தேவிகாவைப் பற்றி சொல்லும்போது இனிமையான இளமை என்று சொல்லத் தூண்டும் அழகு...

இந்த சரணத்திலிருந்து நமக்கு ஒன்று புரிகிறது...இவள் இவனை சில காலமாகவேத் தன்னோடு சேர்த்துக் கொள்ளத் துடிப்பது ..."தேவைகளை ஏன் மூடுகிறாய்?'இரண்டாம் முறையில் ஒரு உறுதி...

மொழியறியாத பறவைகளும் இந்த வழி அறியும்...இந்த உறவறியும்"...அவைகள் கூடத் துணை தேடும் சுகம் அறியும்...உனக்குப் பார்க்கும் விழி இருந்தும்,பேச மொழி தெரிந்தும்,இங்கே அதற்கான வழிக்கு நானிருந்தும் ஏன் மயங்குகிறாய்....விச்வாமித்திரரின் தவத்தைக் கலைத்த மேனகை வழிதான்...ஈர்க்கிறாள்....சலனம் அவனிடம் தெரிகிறது...அது எப்படிக் கலைகிறது...அடுத்த சரணத்தில்...

"இன்ப ஆற்றினில் ஓடம் ஓடி வரும்,அந்த ஓடத்தில் உலகம் தேடி வரும்...

நம் முன்னவர்கள் வெறும் முனிவரல்ல..

அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை"..."அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை...

.சாமர்த்தியக் காரி...வார்த்தைகளாலேயெ கவிழ்த்து விட்டாள்...எப்படி?...ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கைத் தவறில்லை....நம்முடைய முன்னோர்கள் உன்னை மாதிரித் துறவறம் விரும்பியிருந்தால் நாம் பிறந்திருக்க முடியுமா?????கேட்டதும் தடுமாறித்தான் போகிறான்....அதைக் கால்கள் பின்னுவதிலும்....திரும்புவதிலுமே காட்டி அசத்தி இருப்பார் நடிகர் திலகம்....

காதல் பாடலில் அமானுஷயப் பின்னணியைப் புகுத்தி...சுசீலாம்மாவின் குரலினிமையையும் கவியரசரின் வரிகளையும் இணைத்துப் பாடலை ஏதோ ஒரு உச்சத்திற்குக் கொண்டு சென்றிருப்பார்கள் மெல்லிசை மன்னர்கள்.....பாடலோடு தேவிகாவின் அழகிலும் கொஞ்சம் கிறங்கிதான் போய் நான் பாடலின் பின்னே ......உங்களோடு....http://www.youtube.com/watch?v=3lIpebdRTw0