Visali Sriram

September 12 at 5:07pm

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...11.

இன்றைய இசைப்பயணத்திலும் ஒரு பிரியா விடைப் பாடல்....ஆனால் ஒரு இனிமையான காதல் பாடல்

பாதகாணிக்கைதிரைப்படத்தில் கவியரசரின் வரிகளில்,மெல்லிசைமன்னர்கள் இசையமைப்பில்,சாவித்திரி அம்மாவுக்காக சுசீலாம்மா பாடிய அழகான பாடல்.பாடல் கேட்பதற்கு எவ்வளவு இனிமையோ அவ்வளவு இனிமை காண்பதற்கும்.....

முறைமாமன் ஜெமினிகணேசன்,அவர்களை மனதிற்குள் வைத்து முடிந்திருக்கும் சாவித்திரி,அத்தை வீடுதானே என்று வந்தவள்,திரும்பி செல்லும் நாள் வருகிறது,காதலினிடம் பிரியாவிடை...எப்படி அவன் புகைப்படத்திடம் பாடுவது போல்(அத்தனை நாணம் கொட்டிக் கிடக்கும் அந்தப் பெண்மையில்)பாடல்.

சுசீலாம்மா இந்தப் பாடலில் பெண்மையின் அத்தனை நாணம்,மென்மையைக் குழைத்துக் கொட்டி இருப்பார்கள்.இனிமை...இனிமை அப்படி ஒரு இனிமை...பாடல் முழுவதுமே"வா"என்ற ஒரு நேர்மறையுடனே முடியும் வண்ணம் புனையப்பட்டிருக்கும்."போய் வரவா.....உந்தன் மனத்தைக் கொண்டு செல்லவா....எந்தன் நினைவைத் தந்து செல்லவா....என்று ஒரு பண்டம் மாற்று....

கொண்டு செல்லாவா.....இங்கு ஒரு ஏக்கம் கலந்து பாடி இருப்பார்கள்...ஆஹா!!!கவிநயம் பாடல் முழுவதும் களிநடனம்.....

மல்லிகை மலர் சூடிக் காத்து நிற்கவா...மாலை இளம் தென்றல் தன்னை தூது விடவா....நல்லதோர் நாள் பார்த்து சேதி சொல்லி அனுப்பவா....இல்லை நாட்டோர்கள் சாட்சி வைத்து வந்து விடவா.....

என்ன ஒரு கண்ணியம்.."ஓடிபோலாமா...ஓடிபோய் கட்டிக்கலாமா....இப்படி நாராசங்களை கேட்டு கும்மி அடிக்கும் இன்றைய இள நெஞ்சங்களே.....இந்த கண்ணியத்தைப் பாருங்கள்!!!!!

எல்லோருக்கும் தெரியும்படி என்னை வந்து மணம் பேசு...சாட்சியுடன் வருகிறேன் என்கிறாள்....வந்துவிடவா.....என்ன இனிமை அங்கு....!!!மணம் முடித்து பின் என்ன....அதையும் ஒரு நாணத்தோடு சொல்கிறாள்...

பெண் பார்க்கும் மாப்பிள்ளை முகம் பார்க்கவா....முகம் பார்க்க முடியாமல்.....நாணம்...உறவுக்காரன் தான்....ஆனாலும்....பெண்ணாயிற்றே....நிலம் பார்க்கவா....நிலத்தை எவ்வளவு நேரம் பார்ப்பது....

தைரியமாக சொல்கிறாள்"உன்னை நாடவா"இந்த இடத்தில் சுசீலாம்மா ஒரு சின்ன இடைவெளி விட்டு உன்னை நாடி...உன்னை நாடி....(மெல்லிய குரலில்)உறவாடவா....என்று முடிக்கவும்.....அதுவரை பாடல் முழுவதையும் ஒளிந்து கேட்டுக்கொண்டு ரியாக்ட் செய்யும் ஜெமினி எதிரில் வர........அந்த இடத்தில் சாவித்திரி அம்மாவின் முகத்தை பார்க்க வேண்டுமே.....

ஆயிரம் கோடி மலர்கள் பூத்துப் பொங்கும்....சுசீலாம்மா,சாவித்திரி அம்மா பாடல்கள் இனிமையில் ஒரு பங்கு அதிகம்.......இந்தப் பாடல் அதற்கு விதி விலக்கல்ல....இன்னும் பலபாடல்கள் இவர்களுடன் நாம் பயணிக்கலாம் என்றாலும் இன்று இந்த இனிமை உங்களுடன்...இப்பொழுது...