Visali Sriram

 

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...60."இதயக் காவினிலே இசைக்குயில் தானே இனிமையாய்க் கூவுதடா...அதனால் இன்பமே காணுதடா"...உண்மை சுமர் 60 வருடங்களாக என் இதய்க் காவினில் கூவிக்கொண்டிருக்கும் இந்தக் குயில் என்னிடமுள்ள ஒரு துளி சந்தோஷத்திற்கு முழுமையான காரணம் எனபதை மறுக்க முடியாது..மிஸ்ஸியம்மா திரைப் படத்தில் ஜமுனாவுக்காக அம்மா பாடிய இந்தப் பாடலை எழுதியவர் தஞ்சை ராமய்யா தாஸ் அவர்கள் இசையமைத்தது எஸ்.ராஜேஸ்வர ராவ்.தமிழ் கொஞ்சி விளையாடும் வரிகள்...அதற்கு இனிமை சேர்க்கும் கரஹரப்ரியா ராகம்...அருமையான சாஸ்த்ரீயப் பிண்ணணி இசை...காட்சியில் கோபமான சாவித்திரி...குறும்பாக ரசிக்கும் காதல் மன்னன்..ருஷ்யேந்திர மணி அவர்கள்...நடனமாடும் தெத்திப் பல்லழகி ஜமுனாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்....வெகுளியான பெண் பாத்திரம்...வெளுத்து வாங்கி இருப்பார்..பாடல், காதல் தேவன் மன்மதனைப் பற்றியது...சிருங்காரம் தமிழோடு விளையாடும் வரிகள்.."அறியா பருவமடா..மலர் அம்பையே வீசாதடா...மதனா"....'"மாலையில் தென்றல் மருவிடும் மலர் போல்....ஓ ஓ ஓ ஓ....மாலை நேரத் தென்றல் தன் குளிர்ந்த காற்றால் மலரத் துடிக்கும் மலர் அரும்புகளைத் தாவி அணைப்பது போல்.....இந்தப் பொருளை ஒரு இம்மி குறையாமல் அந்த ஓ ஓ...ஆலாபனையில் இனிமையாக சொல்லி விடுவார்கள் அம்மா...கண்ணியத்தோடு..."மனமே மயங்குதடா..அதனால் புது நிலை காணுதடா..மதனா"....மயங்கும் விரகத்தால் வாழ்க்கையின் மீது புதியதாய் ஒரு ஆசை நிலை தோன்றுகிறதாம்.....அந்த மதனா.....விளிக்கும் அழகில் மன்மதன் வந்து நிற்கப் போவது நிஜம்...."கொஞ்சிடும் கிளி போல் குலவிடவே மனம்....ஆ ஆ ஆ ஆ....விஞ்சித்தாவும் மனதை விஸ்தாரமாய் அச்சாரம் போடும் அந்த அகாரம்....ஆஹா அருமை...அருமை..இந்த எண்ணமே அவளுக்கு மேனி சிலிர்க்கிறதாம்....சிலிர்க்குதடா...அம்மா பாடும் போது சிலிர்க்கவே செய்யும்...உணர்ந்து பாருங்கள்...." இதயக் காவினில் இசைக்குயில் தானே ஏ ஏ ஏ ஏ...இனிமையாய்க் கூவுதடா...அதனால் இன்பமே காணுதடா...மதனா...இது பாடல் வரிகள்...ஆரம்பத்தில் நான் சொன்னது போல் அது என் வாழ்க்கைக்கு மிக முக்கியமான வரிகளாயிற்று சுசீலாம்மா பாடல்கள் கேட்கத் தொடங்கிய நாள் முதல்...சுமார் 60வருடங்களாகியும் இந்தக் குயில் என் இதயக் கூட்டுக்குள் ஆத்மராகமாய் இசைத்துக் கொண்டிருப்பதென்னவோ மறைக்க முடியாத ரகசியம்...இன்று அம்பலம் உங்களுடன்...பாடலாய்...