பாடலைத் தொடர்ந்தே சென்றேன்....2...

....ஒரு காதல் கடிதம்...என்ன எழுதப் போகிறாள்.....அதை சொல்லும் அருமையான பாடல்......

கற்பனையின் ஊற்று கவியரசர்.....அவருடைய கற்பனை(பெண்ணாக)....கடல் அலை போலப் பெருகி வரும் கற்பனை.....அதற்கு மெட்டமைத்தவர் கோவர்தன் மாஸ்டர்...காட்சியில் காதல் மன்னன்...சரோஜா தேவி.....படம் ...கைராசி......"அன்புள்ள அத்தான் வணக்கம்".....

பாடல் அழகான காப்பி ராகத்தில்...

பாடிய குரல் சுசீலாம்மா....கேட்கணுமா....கண்டிப்பா கேட்கணும்...கேட்டுக் கொண்டே இருக்கணும்...

அன்புள்ள அத்தான்....ஒரு சின்ன இடைவெளி விட்டு வணக்கம்...இப்போது பாய ஆரம்பித்த தேன் நம் காதில்...தொடர்ந்து அமிர்த மழையாக...

இனிமேல் வரும் வார்த்தைக் கோர்வைகளைக் கேளுங்கள்...அதை அம்மா கூறும் அழகையும் நளினத்தையும் ரசியுங்கள்.

உங்கள் ஆயிழைக் கொண்டாள் தயக்கம்....

...தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும்...கண்ணிருந்தும் இல்லை உறக்கம்......கண்ணிருப்பவர்களுக்கெல்லாம் கண்டிப்பாக உறக்கம் வரணுமா என்ன????

மாலைப் பொழுது வந்து பகல் போல கொல்லும்...

வருவார் வருவார் என்ற சேதியும் சொல்லும்...ஆலிலைப் போன்ற உடல் ஆசையில் துள்ளும்....அந்தியிலே இயற்கை என்னையும் வெல்லும்.....இந்தச் சரணம் முழுக்க விரகம்...துளியும் விரசமில்லாமல்.....

அடுத்த சரணம்...பிரிவுத் துன்பம்...பொறுக்க முடியாத துன்பம்...அவள் வரிகளில்....பருவம் நிறைந்திருந்தும் எனக்கென்ன சுகமே..

பருகும் இதழிரண்டும் எனக்கென்ன பயனே....

கரங்கள் இரண்டிருந்தும் அணைப்பதற்கில்லை..

கண்ணா...இனி நான் பொறுப்பதற்கில்லை....இதையும் கேட்டுக் கொண்டு கல்லுடி மங்கனாக காதலன் கேட்கிறான்..."இவ்வளவு எழுதியும் நான் வரவில்லையென்றால்?..கேட்க...

சுசீலாம்மாவின் குரல்,பாவம்,நளினம் எல்லாமே மாறும்....அதில் ஒரு உறுதி தெரியும்..."பொன் மணி மேகலை பூமியில் வீழும்..

புலம்பும் சிலம்பிரண்டும் என்னை விட்டு ஓடும்...கைவளை சோர்ந்து விழும் கண்களும் மூடும்....காண்பவர் உங்களைத்தான் பழி சொல்ல நேரும்.....காண்பவர் உங்களைத்தான் பழி சொல்ல நேரும்...

சங்க காலப் பாடல்களின் தாக்கம்...பிரிந்து சென்ற தலைவனைப் பற்றித் தோழியிடம் தலைவி புலம்பும் வரிகளுக்கு சற்றும் மிகையில்லாமல் தமிழினிமை சற்றும் குறையாமல் வார்த்தை ஜாலம்....அதை அம்மா கையாண்டிருக்கும் நேர்த்தி....இனிமையின் மொத்தக் கூட்டு....

அன்றிலிருந்து இன்று வரைப் பாடலைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறேன்...ரசித்துக் கொண்டே இருக்கிறேன்.....

இந்தத் தேனடை உங்களுடன் பகிர....இதோ...https://www.youtube.com/watch?v=TIVPKqfqDXo

அத்தான் பாடல்கள் அம்மாவுக்கு அல்வா சாப்பிடற மாதிரி....கவியரசர் அத்தானைப் பற்றி பத்தி பத்தியாய் எழுதும் எத்தன்....

வேறு யாரு இந்தப் பாடலை (அம்மாவைத் தவிர)பாடத் துணிந்தாலும் அது அத்தானில்லை...வெறும் பொத்தான்...சட்டை பொத்தான்....கேட்டவன் செத்தான்...