Visali Sriram

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்..20.

1963...ஆனந்தஜோதி....கவியரசர்..மெல்லிசைமன்னர்கள்..புரட்சித் தலைவர்...தேவிகா...

http://www.youtube.com/watch?v=7axDjV-hzAw நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?

ஒரு எதிர்மறையான பாடலாகத் தோன்றினாலும் இது ஒரு எதார்த்தமான பாசிடிவ் பாடலே.கவியரசரின் தனி முத்திரைப் பாடல்...

.மனித ஜாதியில் துயரம் யாவுமே மனிதனால் வந்தது தான்..மனம் தெளிந்தால்...மனது சுத்தமானதாக இருந்தால் மலையளவு துயரமும் கடுகளவே....இதைப் பிரிந்த காதலுக்கு மருந்தாக பாடல் புனைந்துள்ளார்.

வரிகளில் எவ்வளவு உண்மையோ இசைக் கோர்வையில் அவ்வளவு தண்மை....குளுமை...பின்னணி இசையோ ஆரவாரமில்லாமல் சுசீலாம்மாவின் குரலுக்கு பக்கவாத்தியமாகவே பாடல் முழுவதும்....

பாடலின் முழு பொறுப்பும் சுசீலாம்மாவின் கைகளில்தான்...

.நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா....தா.....இந்த ஒரு தாவிலேயே கொதிக்கும் மனம் அடங்கிவிடும்...அப்படி ஒரு ஆளுமை குரலில்....

பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?.....உயிரே?.....உயிரைத் தொடும் பாடல்...அப்படியே ஸ்தம்பிக்க செய்யும் அந்த உயிரே.....எதுக்குமே ஒரு விடை இருக்கிறது....விடையில்லாத கேள்வி....விடியாத இரவு....திறக்கத பூட்டு என்று எதுவுமே இல்லை...படைத்தவனுக்குத் தெரியாதா?விடை என்ன என்று....அவனிடமே கேட்டுவிடுவோமே?என்று சரமாரியாக வீசுகிறாள் கேள்விக் கணைகளை....

எடுக்கத் தெரிந்த கரமே உனக்கு கொடுக்கத் தெரியாதா?இனிக்கத்தெரிந்த கனியே உனக்கு கசக்கத் தெரியாதா?கசக்கத் தெரிந்த கனியே உனக்கு இனிக்கத் தெரியாதா?என்று கேட்காமல் இனிப்பை முதலில் வைத்தது எதிர்மறை என்றோ சோகம் என்று கொள்ளாமல் யதார்த்தம் என்று கொள்ளவேண்டும்....

படரத் தெரிந்த பனியே உனக்கு விலகத் தெரியாதா?இருளுக்கு பின் வரும் ஜோதிபோல இந்தப்பிரிவு நிரந்தரமில்லை....பகலவனைக் கண்ட பனிபோல காதலனின் வருகை அதை விளக்கும் கதிரவனின் வருகை....அப்படி ஒரு நம்பிக்கையை முன் வைக்கும் பாடல்...

பிரிக்கத் தெரிந்த இறைவனுக்கு இணைக்கத் தெரியும்...என் தலைவனுக்கு என்னையும்,என் நிலைமையும் புரியும் என்று பாடல் முடிகிறது.

இந்தப் பாடலின் சிறப்பு அம்மாவின் மேல்ஸ்தாயி வரிகள்....என்ன சுருதி சுத்தம்....அந்த ஸ்ருதியில் அப்படி ஒரு வார்த்தை சுத்தம்...பாவம்...

.சுசீலாம்மாவின் சிறப்பே அதுதான்....உச்சஸ்தாயியில் பாடும் போது ஒரு தென்றல் காற்று போல வருடிக் கொண்டு செல்லும்....கத்துவதாகவோ,கஷ்டப் பட்டு காதிலே கையை வைத்துக் கொண்டு போராடும் போராட்டமாக இருக்காது...அது அவரைத் தவிர வேறு யாராலையும் முடியாது.....

சுகம்...சுகம்....துன்பத்தையும் இன்பமாக்கும் சுகம்.....அந்தக் குரலுக்கு....புல்லாங்குழல் வயலின் அந்த மெல்லிய ரிதம்.....இதயம் தொட்ட இன்னிசை....இந்தப் பாடல்.....

 

·         Aravind KarthikRajeswari Narayanan

 and 15 others like this.

·        

Rajeswari Narayanan 'தெரியாதா ' எத்தனை அழகு எத்தனை வகை

21 hrs · Like

·        

Susi Priya What a song... Susila amma songa nenaicha enaku antha songa maraka theriyathu...

21 hrs · Like · 1

·        

Susi Priya Thank u rajeswari mam.

21 hrs · Like

·        

Anuradha Ramani Pazhaga therindha uyire unakku enaikku theriyadath pazhagu therindha thalaiva unakku ennai puriyadha. Liked it.

20 hrs · Like

·        

Susi Priya Nice line..

20 hrs · Like

·        

Easkki Karthikeyan

·        

Thiagarajan Gulandhaisamy This melody will live for ever

11 hrs · Like · 2