Visali Sriram

 · 

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...42.

அமுதைப் பொழியும் நிலவே...நீ அருகில் வராததேனோ???1957 இல் பந்துலு மாமாவின் தங்கமலை ரகசியம் திரைப்படத்திலிருந்து பட்டி தொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பின பாடல்.லிங்கப்பாவின் இசையில்......சுசீலாம்மவின் ஆரம்பக் கால ஹிட் பாடலில் இதற்கு ஒரு தனி இடம் உண்டு...இன்று வரை இந்தப் பாடலைப் பாட முயலாத மேடையே இல்லை...பாடகிகளே இல்லை...ஒருவருக்கும் கொஞ்சம் கூட சரியாகப் பாட முடியவும் இல்லை...அதுவும் அந்த வராததேனோ......நோ நோதான்....

காட்சியில் ஜமுனா...பால்வடியும் குழந்தை முகம் அவருக்கு...இப்பவும்கூட....

அம்மாவிற்கும் இளவயது...குரல் அப்படியே கொஞ்சும்...கெஞ்சும்....

இளம் காதல்...அதிலே ஒரு இன்னசென்ஸ்...

நிலவைப் பார்த்து பாடுவது போல...சுசிலாம்மாவுக்கும் நிலவுக்கும் ஒரு தனி அனுபந்தம்....எல்லாப் பாடல்களுமே சூப்பர் ஹிட்தான்.

அமுதைப் பொழியும் நிலவே....என்று தேனோடு கலந்த செந்தமிழில், ஒரு சங்கதியோட கூப்பிடும் அழகு....நீ அருகில் வராததேனோ.....என்று நோவில் ஒரு அழுத்தம்....ஆஹா...ஓ ஓ ஓ.....அந்த ஓவிற்கு ஒரு ஓஹோ....

நிலவோடு ஒரு உரையாடல்...உன்னிடம் கொண்டுள்ள அளப்பறியாக் காதலினால் அந்த அல்லி மலர் வாடுவது உனக்குத் தெரியவில்லையா??என்று கேட்கும்படி...புது மலர் வீணே வாடி விடாமல் புன்னகை வீசி ஆறுதல் கூற...அருகில் வராததேனோ??சிறுபிள்ளைப் போல் இருந்தாலும் கவிநயம் அருமை...

மனதில் ஆசையை ஊட்டிய பின்னே மறைந்தே ஓடிடலாமோ.....தொடரும் அகாரம்....அதை சொல்ல வார்த்தையில்லை...கேட்கும் போது ரொம்ப சாதாரணமாய்த் தெரியும் என்று இந்தப் பாடலைப் பாட ஆரம்பித்த பலர் இந்த இடத்தில் வழுக்குவதைப் பார்க்கிறோம்...கேட்கிறோம்..இன்றும்...இதெல்லாம் கேட்டு ரசிக்கத்தான் முடியுமே தவிர வாயைத் திறந்து பாடமுடியாது...தெய்வீக ராகம்...தெவிட்டாத பாடல்...கேட்டாலே போதும்....

இளமை நினைவும் இனிமைக் கனவும் கனவாய் கதையாய் மாறிடும் முன்னே....அருகில் வராத தேனோ????நோ நோ......கேட்கக் கேட்க தெவிட்டாத நோ....

தொடர்ந்து கேளுங்க கேளுங்க....கேட்டுக்கொண்டே இருங்க...தொடர்ந்து செல்கிறேன்...https://www.youtube.com/watch?v=o7n8di18mT8