Writeup :: Visali Sriram
பாடலைத் தொடர்ந்தே
சென்றேன்.9.
பெண்பார்க்கும்
படலம் ...அந்நாளில்
மிகவும் பிரபலம்...இந்நாளில்
எங்கோ அங்கும்
இங்கும் ஒட்டிக்
கொண்டிருப்பதாய்க்
கேள்வி...முக்கால்வாசித்
திருமணங்கள் அலுவலகங்களிலும்,பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும்...இன்ன
பிற இடங்களிலுமே
முடிவாய் விடுவதாய்
ஒரு பேச்சு....
ஆனால்
இந்தப் பெண்பார்க்கும்
நிகழ்சிக்கு என்று
சில வரைமுறை இருக்கிறது...அது
ஒரு இனிய அனுபவம்.முதன்
முதலாய்ப் பலர்
நிறைந்த சபையில்
ஒரு பெண்ணும் ஆணும்
கண்ணோடு கண் கலந்து
மௌனமொழியிலேயே
விபரம் பரிமாறிக்
கொள்ளணும்....அங்கு
வாய்ச் சொற்கள்
பயனில.....எப்படி?
கவியரசர்
சொல்லித்தர மெல்லிசை
மன்னர் இசை கூட்ட
சரோஜா தேவி அம்மா
வாணிஸ்ரீக்கு
சொல்லித் தருகிறார்
பாடலினால்.பாடல்
பாடியிருப்பது
நம்ம சுசீலாம்மாதான்.
பாடல் அமீர்
கல்யாணி ராகத்தில்
அமைக்கப் பட்டுள்ளது.மெல்லிசை
மன்னரின் வேறு
அமீர் கல்யாணிக்கும்
இதற்கும் எத்தனையோ
இனிமையான புதுமையான
மாறுபாடுகள்.
கவியரசர்
பெண்ணுக்கு அறிவுரை
சொல்லும்போது
"தாயினும் பரிந்து
சால வாகி விடுவார்"
"தித்திக்கும்
பாலெடுத்து தெய்வத்தோடு
கொலுவிருந்து
முத்துப் போல்
வாழ்வதற்கு மாலை
சூடும் மணவிருந்து"பெண்
பார்த்து திருமணம்
முடிந்து விருந்து
வரை ஒரெ வரியில்!!!
பெண்ணான நீ
என்ன செய்ய வேண்டும்?வாணிஸ்ரீக்கு
அறிவுரை..."பொன்னைப்
போல் நீ இருந்து
அன்னம் போல நடை
நடந்து..
உன்னத்தான்
மடியிருந்து அள்ளி
வைப்பாய் தேன்
விருந்து.."இப்போதும்
சொல்லும் விருந்து
தனிமை விருந்து...உன்னத்தான்.....இந்த
அத்தான் என்ற சொல்
பிரயோகம் கவியரசர்
தான் செய்ய வேண்டும்...சுசீலாம்மாதான்
பாட வேண்டும்....அத்தானில்தான்
எத்தனை வகை....இங்கு
உன்னத்தான்...அதில்
ஒரு மின்னல் சங்கதி...மடியிருந்து
அங்கு ஒரு இறக்கம்
...
அள்ளி வைப்பாய்
தேன் விருந்து....இங்கு
துள்ளும் உற்சாகம்...
ஷெனாயோடு
"பெண்பார்க்க
மப்பிள்ளையும்
பெற்றோரும் வரும்
போது....பெண்ணான
நீ நேருக்கு நேர்
பார்த்துவிடாதே...எச்சரிக்கிறார்.
மண் பார்த்து
அடி மேலே அடி எடுத்து......ஒரு
சிறு இடைவெளி...மீண்டும்
மண்பார்த்து அடி
எடுத்து.....எதற்கு????அதனுடைய
அருமை சொல்ல...ஒரு
கண்ணால் பார்த்து
கனிவோடு மலர்வது
பெண்மை...அவன் நயன
மொழியில் சிங்காரக்
கண்ணி என்றால்
செவ்விதழில் சத்தமில்லாமல்
புன்முறுவல் செய்து
பதில் தா படித்தாளா?என அவன்
கேட்டால் உன் படிப்பெல்லாம்
பர்வையால் மௌனமாக
சொல்வதே மென்மை".......
இப்போது போல்
கால் மேல் கால்
போட்டுக் கொண்டு
ஆணுக்கு பெண் இங்கு
இளைப்பில்லை காண்
என்று தப்பர்த்தம்
கொள்ளுவது சிறப்பல்ல......
பெண்பார்த்து,பேசி
மணம் நிச்சயித்த
பொழுதில் அவள்
மனதில் நிழலாடுவது
என்ன?கல்யாண
மணவறையும்....கண்ணாடி
நிலவறை...அது என்ன?அதுதான்
பள்ளியறை என்ன
ஒரு தமிழ் நயம்...கௌரவம்...
அதைக் காணத்
துடிக்கும் பெண்மனம்
முள்ளோடு மலராக
மனம் தள்ளாட தனியறையில்
காண்பதுதான் இன்பமாம்.இவ்வாறு
பாடி முடிக்கிறாள்..
அமீர்கல்யாணியில்
ஒரு புது பரிணாமம்.பாடலின்
வேகம்....அதிலும்
ஒரு விவேகம்...
சிங்காரக்
கண்ணி.....இந்த இடத்தில்
ஒரு அழுத்தம்....படித்தாளா???எனக்
கேட்டால்....அதை
மறுமுறை தொடரும்
போது அந்த தாளப்
பின்னணி...
ரசித்து ருசித்து
எழுதிய,இசையமைத்த,படமாக்கிய,காட்சிக்கு
பெருமை சேர்த்த
சரோஜா தேவியும்
வாணிஸ்ரீயும்...
சிகரமாகப்
பாடிய சுசீலாம்மா....எப்போது
கேட்டாலும் பெண்பார்த்த
ஞாபகம்தான்.....
தாமரை நெஞ்சம்
படத்தில் இயக்குனர்
சிகரம் இயக்கத்தில்
சுசீலாம்மா பாடிய
தித்திக்கும்
பாலெடுத்து... உங்களோடு......http://www.youtube.com/watch?v=N1_ot2Sx3Io