·
பாடலைத்
தொடர்ந்தே
சென்றேன்....65...
பொன்விழாக்
கண்ட ஒரு
பொன்னான
பாடல்...என்றும்
புதிதாக
இளமைக்
குறையாமல்...கன்னித்
தமிழ் போல்....
பாடலில்
இரண்டு
கன்னியர்கள்...ஒருவள்
பாட மற்றவள்
நாணுகிறாள்.இது
அவர்களின்
அந்தரங்கம்....அரங்கத்துக்குப்
பாடலாக
வருகிறது,கவியரசரின்
வரிகள்...மெல்லிசை
மன்னர்கள் இசை...பெண்மைக்கு
மென்மை
சேர்க்கும்
சுசீலாம்மா...காட்சியில்
விஜயகுமாரியும்,புஷ்பலதாவும்....படம்
1964 இல்
வெளியான
பச்சை
விளக்கு
திரைப்படப்
பாடல்...ஒரு
சிரஞ்சீவிப்
பாடல்...பாடினவருக்கும்
வயது ஆவதில்லை...பாடலுக்கும்
முதுமை
இல்லை...
விஜயகுமாரியின்
கையில் ஒரு
படம்,புஷ்பலதாவின்
பிடியிலிருந்து
கவரப் பட்டது...அதில்
இருப்பவர்
ஏ.வி.எம்
ராஜன்...விஜயகுமாரி
விடுவாரா??இன்றைய
இளசுகளின்
வார்த்தைப்
படி ஓட்டு ஓட்டு
என்று
ஓட்டிவிடுகிறார்.பாடல்
பிறக்கிறது.."அவள்
மெல்ல
சிரித்தாள்
ஒன்று சொல்ல
நினைத்தாள்
அந்த பொல்லாத
கண்ணனின்
ராதை...ராதை..
நெஞ்சில்
நாணம்
கொண்டாள்
கண்ணை மூடிக்
கொண்டாள்
அந்தப்
புல்லாங்குழல்
மொழி
கோதை"...அவள்
காதல்
வயப்பட்டிருப்பதைச்
சொல்ல முடியாமல்
நாணுகிறாள்....புல்லங்குழல்
மொழிக் கோதை...இங்கே
இது
சுசீலாம்மாவிற்கே
பொருந்தும்...குழல்
இனிது என்பர்
எம் மக்கள்
சுசீலாம்மா குரல்
கேளாதார்"...உண்மை
அது
தானே....பாடல்
முழுவதும்
குழலும்
பயணிக்கும்...குரலுக்கும்
அதற்கும்
வித்தியாசமே
இருக்காது
அத்தனை இனிமை...
தொடரும்பிஜி
எம்மில்
நஞ்சுண்ட
ரெட்டியார்
குழலோடு
விளையாடி
இருப்பார்...தொடரும்
வயலின்கள்...ஆஹா....இருப்பது
கோகுலத்திலா
என்று ஒரு
சந்தேகம்...
சரணம்.."ஒரு
பட்டு
பிரித்தாள்
முல்லை மொட்டு
விரித்தாள்"....பட்டுப்
போன்ற இதழ்
விரித்து
முல்லைப்
பற்கள்
தெரியும்படி
ஒரு புன்னகை...'தங்கத்
தட்டுப் போலே
அவள்
கிடந்தாள்"...தங்கசிலையோ
என்று
ஜொலிக்கிறாளாம்..
"அவன்
ஏங்கி
வந்தான்
சுகம் வாங்க
வந்தான் அங்கு
தூங்கிய
பெண்மையில்
எழுந்து
நின்றாள்...பாரடி
பாரடி
பாவையின்
ஆசையை ஓரடி
ஈரடி நடக்கின்றாள்"..
அவனைக்
கண்டதும்
தன்னை
மறந்தாள் தன்
நாமம் கெட்டாள்...தலைப்
பட்டாள்
நங்கை தலைவன்
தாளே....
"அந்தத்
தங்கப் பதுமை
உடல்
பொங்கும்
இளமை
அந்த ஆனந்த
கங்கையில்
விழுந்தாள்..
அவன்
தாங்கிக்
கொண்டான்
நெஞ்சில்
வாங்கிக்
கொண்டாள்
பெரும்
சந்தோஷப்
படகினில்
மிதந்து
வந்தாள்..
காதலன்
காதலி நாடகம்
ஆடிடும்
நாளொன்று போனது
இளமையிலே....
காதலன்
காதலி காதல்
நாடகத்தை
அம்பலமாக்கும்
வரிகள்...கற்பனைதான்...சுகமான
சுவாரசியம்மான
கற்பனை...
பாடல்
முழுவதும்
ஒரு பெப் பரவி
நிற்கும்....பின்னணி
இசையும்
மென்மையாக
அம்மாவுக்கு
மேன்மை
சேர்க்கும்...எத்தனை
காதல்
பாடல்கள்
வந்தாலும்
ஒரு சில
பாடல்களே நம்
மனத்தைத்
தொடும்....இது
அந்த வகைப்
பாடலில்
முதல்
படியில்.....கேட்டுக்
கொண்டே
இருக்கணும்
போல ஒரு இன்ப
அதிர்வு....தொடர்கிறேன்...உங்களோடு...