Visali Sriram

 

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...64.

1963...முக்தா பிலிம்ஸ் இதயத்தில் நீ வெளியீடு....பாடல்கள் வாலி...அறிமுகம் என்று நினைவு...இசை மெல்லிசை மன்னர்கள்.முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் படம் என்றாலே பாடல்கள் முத்தாக இருக்கும் ஏன் என்றால் அனேகமாக இசை மெல்லிசை மன்னர்கள்.ஜெமினி கணேசன்,ேவிகா...

இந்தப் பாடலை நான் தொடர்ந்து செல்லும் காரணம்..இதிலுள்ள யதார்த்தம்...சுமந்து வரும் சோகம்....சுசீலாம்மா...

தொகையறாவிலேயே நம்மைக் கட்டிப் போட்டுவிடுவார்கள் தன் குரலினிமையால்.."பழகி வந்த புதிய சுகம்..பாதியிலே மறைந்தாலும்...எழுதி வைத்த ஓவியம் போல் இருக்கின்றாய் இதயத்தில் நீ...இதயத்தி நீ..ஈஈ..

மனசு என்னமோ செய்யும் இதைக் கேட்டதும்...ஒரு வேதனை....அதுவும்.."புதிய சுகம்ம்...என்று நிறுத்தும் போதும்...ஓவியம் போல்....அந்த போலில் ஒரு சுழி...இதயத்தில் நீ...நீயில் ஒரு நீட்டம்...

"உறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கும்..

காதல் என்றொரு கதை இருந்தால் கனவு என்றொரு முடிவிருக்கும்...

உண்மை...சொல்வதெல்லாம் உண்மை...யதார்த்தம்...ஆனால் காதலிக்கும் போது இது தெரிவதில்லையே...பிரிவு வரும்போது கூடவே தத்துவமும் புரிகிறது...அவளுக்குப் பார்க்கும் இடமெல்லாம் நந்தலாலா மாதிரி அவனே தெரிகிறான்...நெருங்கினால் கானல் நீராய் மறைகிறான்...

"இதயம் என்றொரு சொல்லிருந்தால் ஏக்கம் என்றொரு நிலையிருக்கும்

இன்பம் என்றொரு வழி நடந்தால் துன்பம் என்றொரு ஊர் போகும்"

நிதர்சனம்..இரவும் பகலும் எப்படி மாறி மாறி வருமோ அது போல இவைகளும் மாற்றத்திற்கு உட்பட்டதே...தெரிகிறது...ஆனால் புரிவதில்லை...இது முடிந்து பல்லவி தொடங்கும் போது சொல்லிருந்தால்....அங்கு ஒரு அழுத்தம்....வரிகளுக்கு வலிமையிம் கேட்பவர்க்கு இனிமையையும் வாரி வழங்கத்தான் செய்கிறது..

"பருவம் என்றொரு கை அணைத்தால் பாசம் என்றொரு கை தடுக்கும்"பருவத்தில் காதல் வருவது இயற்கை...அதை,ெற்றவ்ர்கள் தடுப்பது நிச்சயம்...

பழகு என்றொரு மனம் சொன்னால் விலகு என்றொரு முகம் சொல்லும்.....மனம் என்னவோ பழகு என்று அனுமதி தந்தாலும்...நேரில் சாத்தியமில்லை என்று முகம் சொல்கிறதாம்....

கற்பனை வளத்தோடு நிஜத்தை இத்துணை அழகாக எடுத்தியம்பியதால் தானோ அவர் சாகும் வரை தமிழோடு விளையாடி சரித்திரம் படைத்தார்?

(வாலி அவர்கள்)

பாடல் முழுவதும் எதிரும் புதிருமாக இருந்தாலும் இசையின் மென்மை,வரிகளின் யதார்த்தம்..இதையெல்லாம் மீறி இன்று வரைப் பாடலை நம் மனத்தில் இருத்தியிருக்கும் சுசீலாம்மாவின் தேன் குரல்....எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத சலிக்காத பாடல் உங்களுடன்...https://www.youtube.com/watch?v=uIpswezWfAM