Visali Sriram

 

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்..63.

ராகமாலிகை......

வீணை பாலச்சந்தரின் தயாரிப்பு இயக்கத்தில் 1964 இல் வெளி வந்த திரைப்படம் பொம்மை...திகில் படம்...பாடல் வரிகள் வித்துவான் லக்ஷ்மணன்..இசை எஸ்.பாலச்சந்தர் அவர்களே...

ஒரு நல்ல வீணை வித்துவான்...4 ராகங்களில் ஒரு அருமையான ராகமாலிகை..பாடி இருப்பது சுசீலாம்மா...பாடல் ஒரு நாயகி நாயகன் பாவம் பற்றிச் சொல்லும் நடனப் பாடல்..நடனம் எல்.விஜயலக்ஷ்மி அவர்கள்..சாஸ்த்ரீய நடனம்,வழுவூர் ராமய்யா பிள்ளை அவர்களிடம் பயின்றவர்...இந்தப் பாடல் பார்ப்பதற்கும் ஒரு அருமையான விஷுவல் ட்ரேட்...பாடியதைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது...அருமையோ அருமை...சாஸ்த்ரீய சங்கீதத்திலும் தனக்குள்ள திறமையை அநாயாசமாகப் பாடி அமர்க்களம் செய்திருப்பார் அமரிக்கையாக....

பாடல் ஆரம்பம் சஹானா ராகத்தில்....வீணையோடு....."எங்கோ பிறந்தவராம் எங்கோ வளர்ந்தவராம் எப்படியோ என்மனதைக் அவர்ந்தவராம்..

சிங்காரமாக வந்து சிரித்து மயக்கிப் பேசி அவர் சிட்டாகப் பறந்து விட்டாரே...முல்லை மொட்டாக இருக்க விட்டாரே..."

நாயகன் எங்கோ பிறந்தவர்,வளர்ந்தவர்...என் மனதை எப்படியோ கவர்ந்தவராம்..சிங்காரமாக வந்து சிரித்து மயக்கி பேசிவிட்டு சிட்டாகப் பறந்து விட்டாராம்....எளிய வார்த்தைகள்...அதற்கு அபினயம் பற்றிப் பேசிக்கொண்டே போகலாம்...சீட்டகப் பறந்து....அபாரம்...முல்லை மொட்டாக....கையழகில்...ஆஹா...

எப்படியோ....இங்கே சஹானாவைப் பிழிந்து 'மனதையில்'...ஒரு தங்கக் கோப்பையில் வைத்துக் கொடுத்து விடுவார்...கண்ணையும் காதையும் வேறு எங்கேயும் அலைய விட முடியாது நம்மால்...

அடுத்த சரணம் சாரங்கா ராகம்...இரக்கத்துக்கு சஹானாவும் சாரங்காவும் போட்டி போட்டுக் கொண்டு அவள் மேல்...

'விழி வாசல் தனைக் கடந்து வழி முழுதும் தெரிந்தவர் போல் குழைவாக மனக் கோவில் குடி புகுந்தாரே...

மொழி ஏதும் பேசாமல் மோக வலை வீசி என்னை மோன நிலையாக்கிவிட்டு வழி மறந்தாரே??'

கண்வழியாக உள்ளே புகுந்து வழி தெரிந்தவர் போல் என் மனக்கதவைத் திறந்து உள்ளே சென்றதோடு மௌனத்தினாலேயே மோக வலை வீசி என்னை மோன நிலைக்குத் தள்ளி விட்டு ,இப்போது வழி மறந்தவர் போல் இங்கே வருவதே இல்லை...

அடுத்த சரணம் நாட்டக் குறிஞ்சி.."நிலவுதனைப் பழித்தொரு நாள் என் முகத்தை அவர் புகழ்ந்தார் நிலவும் என்னை வெறுத்ததம்மா துணையுமில்லையே..

மலரை மிஞ்சும் அழகி என்று சொன்ன வார்த்தையினால் மலரும் கோபம் கொண்டதம்மா துணையுமில்லையே"..

தான் சொல்ல வந்ததை பாயின்ட் பை பாயின்டாய் எடுத்து வைக்கிறாள்...

என்னை நிலவை விட அழகி என்றும்,மலரை விட அழகி என்று சொன்னதால் இப்போது நிலவும் மலரும் என்னுடன் இணக்கமாக இல்லை...அழகான வரிகள்...

இறுதிச் சரணம் ஹுசேனி....

"தென்றலைப் போல் ஆடி வரும் திருமகளே என்றழைத்தார்..தென்றலுக்கும் பகையானே வழியுமில்லையே...

ஒன்று சேர்ந்து கலைந்த போது

நடந்ததெல்லாம் கதையுமில்லை உண்மை என்று சொல்லிக் கேட்க யாருமில்லையே"

என்னைத் தென்றலைப்போல ஆடிவரும் திருமகள் என்று சொன்னதால் தென்றலுக்கும் நான் பகையாகிவிட்டேன்.

என்னோடு சேர்ந்து கலந்து போனது கனவாகப் போய் இப்போது அதை உண்மை என்று நம்பக் கூட யாருமில்லையே...எல்.விஜயலக்ஷ்மியின் நடனதைப் பார்த்தாலே பாடல் வரிகள் புரியும்....அம்மாவின் குரலில் பாடலைக் கேடாலே இவரின் அபிநயம் நம் கண் முன்னெ விரியும்....ஒவ்வொரு ராகத்தையும் அதற்குரிய லக்ஷணங்களோடும்...இனிமை குறையாமலும் சுசீலாம்மா அசத்தி விடுவார்...மீளவே முடியாத இனிமையில் பின் தொடர்ந்தே......

சஹானா...நாட்டக் குறிஞ்சி சங்கமம் பின்னாளில் ஒரு பாடலில் வந்த போது ஆஹா ஓஹோ என்ற இளைய கூட்டம் இதைக் கேட்கட்டும்....பாடல் உங்களுடன்...