Visali Sriram

 

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்........
1953
க்குப் பிறகு(என் பிறப்பு)60,70களில் பலமுறை நான் ஒரு பாடலைப் பிடித்துக் கொண்டு அதன் பின்னாலேயே லோ லோன்னு (ஹை..யா)அலைந்ததுண்டு...பித்துப் பிடித்த மாதிரி என்று கூட சொல்லலாம்...இன்றுவரை அந்தப் பித்து என்னை விடுவதற்கு நான் இடம் கொடுப்பதில்லை....என் உயிரோடு ஒன்றாகக் கலந்த இசைப் பித்து...
அப்படி என்னைப் பித்தாக்கிய சில பாடல் வரிசைகளைப் பகிர ஒரு ஆசை....படிப்பவர்களும் இதில் என்னோடு பயணிக்கலாம்....விருப்பமிருந்தால்...
முதல் பாடல் .....கவியரசர் மஹானுபாவன்,மெல்லிசை மன்னர்கள்,கோகிலவாணி...என் இசையரசி சுசீலாம்மா....கூடவே என் ஆசையான சாவித்திரி அம்மா....சிறு வயதிலிருந்தே விவரம் புரியாமல்...."உயிரைத் தொடர்ந்தே சென்றேன்"
பாடல்..வா என்றது உருவம்....காத்திருந்த கண்கள் திரைப் படம்....
ஒரு காதாநாயகிக்கு உரிய எந்த தடாலடி ஒப்பனையும் இல்லாத முகம்(முழு மதி போல களங்கமில்லாமல்)பேருக்குக் கூட ஒரு பொன் நகை இல்லை புன்னகை மட்டுமே.....கருப்பு வெள்ளைப் படத்தில் அப்படி ஒரு அழகு சாவித்திரி அம்மா...ஓலைக் குடிசையில் வைத்தியம் பார்க்க வந்த காதல் மன்னனை ஒளிந்து பார்த்த நாயகி...நிலவொளியில் அவள் மனம் துள்ளி அசைபோடும் அவன் நினைவுகளே பாடல்...
மென்மையான இரவில் குயிலாக ஒரு ஓஹோ..ஓஹோ...ஆஹா ஆஹாவுடன் சுசீலம்மா....மெல்லிசைமன்னரின் பெரும்பாலான சுசீலாம்மாவின் காதல் பாடல்கள் எல்லாவற்றிலுமே அவர் குரலுக்குத் துணை அழகு சேர்க்கும்...குழல்,வயலின்,மாண்டொலின்,சிதார்....இந்த மாதிரி இசைக் கருவிகளே அதிகம் ஒலிப்பதாய் எனக்குத் தோன்றும்.....குயிலின் குரலுக்கு இசை மஹான் செய்யும் மரியாதை அது.....
கவியரசரின் வார்த்தைப் பிரயோகங்களும் மென்மையிலும் மென்மையாக (பெமினைனாக)இருக்கும்.
இன்று வரை பாடல் அழியாமல் இருப்பதற்கு இவையெல்லாமே காரணம் என்பது என் கருத்து.
கவிஞர் வாலி அய்யா அவர்களும் இதில் பெரும் பங்கு(மென்மை..சுசிலாம்மாவுக்காக)அளித்திரிக்கிறார்...அதையும் பின்னால் சில பாடல்களில் பார்க்க இருக்கிறேன்.
வா என்றது உருவம்...நீ போ என்றது நாணம்...பார் என்றது பருவம்...அவர் யார் என்றது இதயம்....இது தொடக்கம்...4 வரியில் காட்சி விளக்கம்...இதில் நாணத்தை அழுத்தி சொல்ல அங்கே ஒரு சங்கதி...ஆஹா...அது சொல்லும் ஒரு மூட்டை நாணம்....
அவர் யார் என்றது இதயம்...இங்கு யாரில் நீட்டி ஒரு மென்மையான அழுத்தம்....ஆஹா...
அடுத்த சரணம் முழுதும் முடியும் வார்த்தை ஜாலம்...கலக்கம்,தயக்கம்,மயக்கம்...உறக்கம்....கால் கொண்டது தயக்கம்....கால்....இதை இழுத்து பாடும் நேர்த்தியில் தயக்கத்தை உணர முடியும்....
அடுத்த சரணம்...மாலை நிலாவினைக் கேட்டேன் அவர் மனதில் உள்ளது என்ன??கேட்டேனில் ஒரு சங்கதி...மனதில்...இங்கு ஒரு பொடி...ஆசை என்றது நிலவு....ஆம் அதுதான் என்றது மனது...ஆம்....இதில் ஒரு உறுதி...
ஒவ்வொரு வார்த்தையும் பாடும் விதத்தில் எப்படி நம்மை வந்து அடைகிறது பாருங்கள்...குரலினிமையும் தமிழினிமையும் இசையினிமையும் இங்கு பரிபூரண சங்கமம்....
இப்போது பாடலின் நிறைவுப் பகுதி....காதல் வயப்பட்டதை நாணத்தொடு சொல்லி முடிக்கிறாள்....
நாணம்...இதை வார்த்தையில் சொல்வது எளிது...முகபாவத்தில்,நடிப்பால் உணர்த்துவதும் சாவித்திரி அம்மா மாதிரி கலைஞர்களுக்கு சுலபம்...ஆனால் நாணத்தை இசையில் சொல்வது,பாடுவது...அத்தனை எளிதல்ல...அதைக் கேட்கும் போது நம்மையும் அறியாமல் கண்கள் தாழணும்,உதடுகளில் குறுஞ்சிரிப்பு வரணும்...கால்கள் கூட முடிந்தால் தரையில் கோலம் போடணும்...சுசிலாம்மாவின் நாணம் ஒன்றுதான் இதைச் செய்யும்...
ஏதோ ஒரு வகை எண்ணம்..அதில் ஏனோ ஒருவகை இன்பம்...
ஒரு நாள்..(ஒரே நாள்...)அவரைக் கண்டேன்...அவ்வளவுதான்...
"
அவர் உயிரைத் தொடர்ந்தே சென்றேன்"...சென்றேன் றேனில் ஒரு சின்ன பொடி.....போய்க்கொண்டே இருப்பதை உணர்த்த...
அன்றிலிருந்து நானும் இந்தப் பாடலின் பின்னே போகிறேன்...போகிறேன்.....போய்க் கொண்டே இருக்கிறேன்,ிற்காமல்....உங்களையும் அழைக்கிறேன்......