Visali Sriram

 

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்..16..

ஒரு வாரமாய்.கவியரசர்.....................சுசீலாம்மா,.இரண்டு பேருமாக என்னை படாத பாடு படுத்த.....உங்களுடன் நெஞ்சத்திலே நீ

நேற்று வந்தாய்:)

இந்தப் பாடலில் காதல் வயப்பட்ட நாயகி கனவில் அவன் நினைவுகளை சுமக்க,எதிரே நிஜமாகவே அவனைப் பார்த்த மாத்திரத்தில்

தன விரகத்தை கண்ணியமாக எடுத்துக் கூறுகிறாள்.

அவனும் அவன் ஆமோதிப்பை வரிகளில் இல்லாமல் விசில் மூலம் சொல்கிறான்.

காட்சியமைப்பு கன கச்சிதம்

.நடிகர் திலகம்,ேவிகா,கண்ணதாசன்,மெல்லிசைமன்னர்கள்........கூட குயில் பாட்டாக சுசீலாம்மாவின் தேன்மழை

.காதல்,ிரகத்தை கௌரவமாக கண்ணியமாக ஒரு பெண் சூசகமாக காதலனிடம் எப்படி வெளிப்படுத்துகிறாள்...."நெஞ்சத்தில் நேற்று வந்தவன்,அங்கேயே அவள் மனதில் குடிபுகுந்து கொள்கிறான்,கனவில்.....மறுநாள் அவனை நேரில் கண்டதும்"நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்....நினைவு தராமல் நீ இருந்தால்(இன்று நீ இப்படி என் முன்னால்)நான் அந்த கனவுலகத்திலேயே வாழ்ந்திருப்பேன்.....வந்தாய்.....இந்த வார்த்தை...அதை அழகாக இழுத்து சாட்சி கூறும் சுசீலாம்மா.....

தமிழ் இந்தப் பாடல் முழுவதும் கவியரசரின் பேனா முனையில் களிநடம் தான்.

அவளின் விரகத்தை,"நூலிடை மேலொரு மேகலை ஆட..மாலைக் கனிகள் ஆசையில் வாட..ஏலப்பூங்குழல்..(என்ன அருமையான சொல்லாடல்)இன்னிசை பாட எண்ணம் யாவும் எங்கோ ஓட..ட விலேயே முடியும் சந்தம்....

அந்த டகரத்தை குரலினிமையில் அம்மா குழைத்துப் போட அவன் அதற்கு பதிலை வார்த்தையில்லாமல் விசிலில் குறும்புடன் இசைத்து காட்டுகிறான்.மாண்டலின் இசைக்கருவியில் கைதேர்ந்த கே.ராஜு விசில் மறக்கமுடியாத குழலிசை..

நூலிடை மேலொரு மேகலை ஆட.....ஆட....இங்கு ஆவிலே ஒரு இழுப்பு...ஏலப் பூங்குழல் இன்னிசை பாட...பா....ட...இங்கு ஒரு இடைவெளி...எண்ணம் யாவும் எங்கோ ஓட.....எங்கோ....இங்கு நம்மை எங்கேயோ இழுத்துக் கொண்டு போகும் ஒரு அபார சங்கதி....

.இரவு பூரா உறங்கவில்லை....காலையில் உறங்கி மாலையில் எழுந்தால் கண்களிரண்டில் நிம்மதி ஏது?

காதல் நோய்...உறக்கம் வராமல் பாடாய் படுத்தும் ஒரு பெண்ணின் நிலையை வரிகளில் கவியரசரும்....இன்னிசையால் சுசீலாம்மாவும்.....கண்களிலேயே மொத்தக் காதலையும் கட்டியம் கூறும் தேவிகாவும்......இன்று கூட சிலிர்க்க வைக்கிறார்கள்

.'காவிரி ஆறென நீர்விளையாட...கன்னி மலர்கள் தேன்மழையாக ,இங்கு அம்மாவின் இசை தேன்மழை என்றால் தேவிகாவின் கண்கள் அங்குமிங்கும் துள்ளி ஓடும் மீனிருக்கும் காவிரி நீர்.....பாதிவிழிகள் தாம் மூடுகின்றதாம்....அதுவும் பாலில் விழுந்த பழம் போல சுகம்....பாதி விழிகள் மூட...மூட இங்கு மூடும் ஒரு மர்ம சங்கதி...ஆஹா...

.இனிமேல் அவனிடம் நேரிடையாகவே சொல்லிவிடவேண்டும் என்று ஒட்டுமொத்த துணிவையும் கொண்டு கேட்டே விடுகிறாள்..."நீ தரவேண்டும்....நான் பெறவேண்டும்"மொத்தத்தில் நிலவில் ஆடும் நிம்மதி வேண்டும் என்று முடிக்கிறாள்...

.காதல் புகுந்து பாடாய்ப் படுத்துகிறது....மணமுடித்து தேன்நிலவுக்கு செல்ல வழிகாட்டுவாய் என்று காதலனிடம் ஒரு பெண்மையின் மொத்த நாணத்தையும் பன்னீராய் சுசீலாம்மா வாரி இரைக்க கவியரசரின் சொல்லாட்சி மழை தேனாக நம் செவிவழி புகுந்து நெஞ்சை நிறைக்கிறது...

.பாடல் நிறைந்து வெகு நேரம்,வெகு நாட்கள்,வருடங்கள் கடந்தாலும் இன்றும் மனதில் ஒரு இனம்புரியாத பரவசம் அளிக்கிறது என்றால் கவியரசர்,மெல்லிசைமன்னர்கள்,நடிகர்திலகம்,தேவிகா.....இவர்கள் எல்லாருடனும் சேர்ந்து சுசீலாம்மா, தன தேன்குரலால் கட்டிப் போட்டிருக்கிறார் என்பது உண்மை...உண்மை....இனிமையான உண்மை.....http://www.youtube.com/watch?v=6KqU4Bijx00