Visali Sriram

 

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...14.

இன்றைய பகிர்வு....வெள்ளிமணி...மணியில்தான் எத்தனை வகை....கோயில் மணி...ஆலயமணி(தேவாலய)பள்ளிமணி....இன்று வெள்ளிமணி...

நாதத்தில் கூட ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி....வெள்ளிமணி....கிணி...கிணி என உள்ளத்தில் இருக்கும் ஆண்டவனுக்கு மட்டுமே கேட்கும் ஓசைமணி...

இந்தப் பாடலில் நாயகி...காத்திருந்த காதல் கல்யாணத்தில் முடியப்போகும் சந்தோஷத்தில் ஆண்டவனுக்கு நன்றி சொல்கிறாள் வெள்ளிமணி ஓசையுடன்....படம்..இருமலர்கள்....மெல்லிசை மன்னர் இசை...

இந்தப் பாடல் ஆரம்பமாவதற்கு முன்பே பாடலின் மோகனத்தை பின்னணியில் இசைத்துவிடுவார்...

பிறகு சுசீலாம்மா மோகனத்தை குழைத்து தெளித்து...அப்பப்பா...மோகனமழை....ஷெனாய் வேற....எளிய இனிய பாடல்

...வெள்ளி மணி என்று ஆரம்பிக்கும் போதே....கிணி கிணி....என நாதத்துடன் இசைந்த கீதம்...உள்ளம் என்னும் கோவிலிலே...மனசுக்குள் பூட்டிவைத்திருக்கும் நாயகன்...மணத்திற்கு இசைந்தான்...மன்னன் வரும் வேளையிலே...வாழ்வு வரும் பூமகளே...என்று தனக்கே இசைத்துக் கொள்கிறாள்...

வேளையிலே....இந்த இடத்தில் ஓர் சிறு சங்கதி.....அது....அவன் வரும் வேளையில் உள்ள விரகத்தை ஒரு மின்னல் கோடு கிழித்து செல்லும் ,சொல்லும்,சங்கதி.....

எத்தனை பிறவி எடுத்தாலும் இவனே என் கணவனாக வேண்டும் என்று ஒரு முடிவோடு....நூறு முறை பிறந்தாளாம்....அந்த நூறு....அம்மா பாடும்போது அந்த நெடிய தவத்தை உணரமுடியும்....

அப்படி ஒரு பாவம்...தவமிருந்தேன்...கோடி முறை....

இந்த தவமிருந்தேன்...அந்த சங்கதியை நானும் இதுவரை நூறு முறையாவது கேட்டிருப்பேன்...ஆனாலும் அது என்ன சிலிர்ப்பு....இன்னும் தவமிருக்கபோகிறேன்.......!!!நான்!!!:)

மனது வைத்த இறைவன் அவன் மனதில் கருணையை விதைத்து என்னைக் கைபிடிக்க வைத்துவிட்டான்.....என்னே என் பாக்கியம்....சந்தோஷமும்,நிறைவும்....கூடவே ஆண்டவனுக்கு நன்றியும்.....

சுசீலாம்மா எத்தனையோ மோகன ராகப் பாடல்கள் பாடியுள்ளார்கள்.....அது என்னமோ இந்தப் பாடல் மோகனத்தில் எல்லாம் சிறந்த மோகனம் எனக்கு.....மெல்லிசை மன்னர் நடுவில் அந்த ஷெனாயை புகுத்தி ஒரு ஜாலம் செய்திருப்பார்...சந்தோஷத்திற்கு ஷெனாயை அவர் மாதிரி யாரால் இவ்வளவு அழகாக சேர்க்கமுடியும் என்று வியந்திருக்கிறேன்!.....எளிய பாடல்....இனிய பாடல்...உங்களுடன்.....http://www.youtube.com/watch?v=SOazHKiLEmg