பாடலைத் தொடர்ந்தே சென்றேன்..10.
இன்று 1961 இல் வெளிவந்த பாக்யலக்ஷ்மி திரைப் படத்தில் இருந்து ஒரு பாடல்.
...பாடல் ஒரே துள்ளல்...ஆனால் அதனுள்ளே ஒருத்திக்கு சோகம்....புழுக்கம்...இன்னொருத்திக்கு இன்பம்,காதல்,ஆனந்தம்.இந்தப் பாடல் ஒரு நிலவுப் பாடல்...
.நிலவு,கவியரசர்,மெல்லிசை மன்னர்,சுசீலாம்மா....இதற்குப் பிறகு இந்தப் பாடலைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது.....நிறைய இருக்கிறது..
.தான் விதவையில்லை,தன் கணவன் இருக்கிறான் அவனோடு தான் இனிமேல் வாழலாம் என்று பூ முடித்து,பொட்டு வைத்து மாடிக்கு ஓடி வருகிறாள் ஒருத்தி,,,
,இன்னொருத்தியோ மாடியில் நிலாவிடத்தில் தன் கணவனோடு இல்லறத்தை அணுஅணுவாக ரசித்து வாழ்வதை காண வந்தாயா?என்று கேட்கும் படி பாடல் தொடங்குகிறது...."காண வந்த காட்சியென்ன வெள்ளி நிலவே....கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே?
நின்றாயோ.....இங்கு அந்த நின்றாயில் ஒரு இழுப்பு இழுத்து திகைக்க வைத்துவிடுவார் குரலில்:)காதல் எந்தன் சொந்தம் என்று அறியவில்லையா?கன்னி உள்ளம் உனக்கிருந்தும் நாணம் இல்லையா?இங்கு கவியரசரின் கை வண்ணம்.கன்னி.....நிலவுக்கும்...கன்னி கழியாத மற்றோருத்திக்கும்...நாணம் இல்லையா?வந்தவளுக்கு சாட்டையடி....என்ன சொல்வது...எப்படி சொல்வது?அது மட்டுமா...அவளுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கைக்கும் ஒரு எச்சரிக்கை....உன் மோகநிலை மறந்து விடு வெள்ளிநிலாவே....மேகத்திலே மறைந்துவிடு வெள்ளிநிலவே....நிலாவே......லா விலே....ஒரு இழுப்பு....
.நீ போகலாம் என்று ஒரு உத்தரவு...வந்தவள் புழுங்கி,விம்மி நிற்க,நிலவோ நீலவான ஆடைக்குள் முகம் மறைக்க நாயகி நாயகனின் கையணைப்பில் பாடல் நிறைவாகிறது....
இதில் காட்சி எவ்வளவு முக்கியமோ கதைக்கு அந்த அளவு இந்த கானமும் முக்கியம்....அந்த பெரிய பொறுப்பை வார்த்தையில் கவியரசரும்,இசையில் மெல்லிசை மன்னர்களும்,குரலில் சுசீலாம்மாவும் ஒரு அருமையான கூட்டணியுடன் களத்துக்கு களை கட்டியிருக்கிறார்கள் என்றால் மிகையாகாது....இப்படிப்பட்ட பாடல்கள் இப்போது வருவதும் இல்லை....இனிமேல் வரப்போவதும் இல்லை.....இதோ உங்களுடன்...துள்ளலில் சந்திலே சிந்தாக துயரம்......https://www.youtube.com/watch?v=FkyJbVuhK7E